நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலை சந்திக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக , ஊழலற்ற ,வளர்ச்சி மிகுந்த ஆட்சியினை வழங்கி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பாஜக கூட்டணிக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கோவை பொங்கலூரில் தலைவர் அண்ணாமலையை சந்தித்த, தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளார். அதற்கான கடிதத்தையும் தலைவர் அண்ணாமலையிடம் அவர் வழங்கினார்.