அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., பாஜகவில் இணைந்தார்!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., வி.கே.சின்னசாமி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த, இன்று தலைவர் அண்ணாமலை முன்பு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்;

மறைந்த புரட்சித்தலைவர் அமரர் எம்ஜிஆர் அவர்கள், முதன்முதலில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற 1977 ஆம் ஆண்டில் இருந்து,  நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், மக்களின் தொடர் நம்பிக்கையைப் பெற்று மக்கள் பணியில் சிறந்து விளங்கும் ஐயா திரு வி.கே.சின்னசாமி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமைப் பண்பினாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தம்மை இணைத்துக்கொண்டார்.

ஐயா திரு வி.கே.சின்னசாமி அவர்களை வரவேற்று மகிழ்வதோடு, அவரது அனுபவமும், மக்கள் பணிகளும், தமிழக பாஜகவிற்கு மேலும் வலு சேர்க்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top