கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 27) தொண்டர்கள் உற்சாக வரவேற்புடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக மற்றும் தேசிய ஜனநாய கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் கடந்த சில நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. தற்போதுவரை 780 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக தலைவர் அண்ணாமலை ஊர்வலமாக வந்து மக்களை சந்தித்தார். அப்போது வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பா.ஜ.க வேட்பாளரான அண்ணாமலை, கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நகர்புரங்கள், கிராமப் பகுதிகள் என அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.