பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் தொகுதி எம்.பி.யான சுஷில் குமார் மற்றும் ஜலந்தர் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., ஷீதன் அங்கூரல் ஆகியோர் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்த ஒரே ஒரு எம்.பி. சுஷில் குமார் ரிங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஜலந்தர் தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு எனக்கு உதவவில்லை. அதனால் தான் ஜலந்தர் மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஆதலால் பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜகவில் இணைத்துள்ளேன் என்று சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் வளர்ச்சி நலத்திட்டங்களை பார்த்து நாடு முழுவதும் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். மீண்டும் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக நரேந்திர மோடி வரும்போது இன்னும் எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக கொண்டு வருவார் என்பது உறுதி.