மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் பிரதமர் மோடி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.
முத்ரா கடன் வழங்கும் திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம், குடிநீர் குழாய் இணைப்பு, மக்கள் மருந்தகம், வீடுகள்தோறும் கழிப்பறை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவி என்று மோடி அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பெரும் பயனடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலைகள், அதி விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், புதிய ரயில் திட்டங்கள், விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் என உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும்.
எனவே, தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு ஹிந்து மக்கள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவளிக்கிறது. தமிழகம் முழுதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். அவர்களின் வெற்றிக்குப் பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.