திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அஸ்வத்தாமனை ஆதரித்து பாஜகவின் மிக முக்கிய தலைவர்கள் வர இருப்பதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. அதே போன்று நேற்று (மார்ச் 27) திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று மனுதாக்கல் செய்தார். அவர் செல்லும் இடமெங்கும் பொதுமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அஸ்வத்தாமன் வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்திற்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஸ்மிருதி இராணி, முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன்,ஓ.பன்னீர்செல்வம், ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.வாசன், டிடிவி தினகரன், குஷ்பு, சரத்குமார் உள்ளிட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் உள்ள இரண்டு முக்கிய பிரமுகர்கள் எனது தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.