குடியாத்தத்தில் தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்கு கேட்டு சென்ற போது பெண்களை பார்த்து, ‘பவுடர் அடித்து, பேரன் லவ்லி போட்டு பளபளவென இருக்கிறீர்களே… 1,000 ரூபாய் பேசுதா…’ என நக்கலாக பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் காந்தி நகர் மற்றும் கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திறந்த வேனில் பொதுமக்களிடம் கதிர் ஆனந்த் வாக்கு கேட்டார்.
அப்போது கூட்டத்தில் நின்றிருந்த பெண்களை பார்த்து, ‘எல்லாம் பேர் அண்ட் லவ்லி, பாண்ட்ஸ் பவுடரு, சிங்கார் குங்குமம்… பளபளன்னு இருக்கீங்க.. என்னானு தெரியல… இன்னா காரணம்… ஆயிரம் ரூவா வந்துச்சா… அதான்’ என்றார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியது. பெண்கள் அனைவரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
ஏற்கனவே அமைச்சர் பொன்முடி பெண்களை பார்த்து ஓசி பஸ் என்று கூறினார். தற்போது திமுக எம்.பி., கதிர் ஆனந்த் பெண்களை மிகவும் கேலி செய்யும் விதமாக பேசியுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு மக்களே கொச்சைப்படுத்துவதற்கு வரும் மக்களவை தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.