சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற ப.சிதம்பரத்தை பெண்கள் விரட்டியடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி வெற்றி பெற்றார். அதன் பின்னர் 5 ஆண்டுகள் தொகுதிப் பக்கமே தலை காட்டவில்லை. தற்போது மீண்டும் தேர்தல் அறிவிப்பு வந்ததால் சிவகங்கைக்கு தந்தையுடன் கார்த்தி சிதம்பரம் வந்து முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில், தனது மகனுக்காக ப.சிதம்பரம் பிரச்சாரத்திற்கு சென்றார். அப்போது மித்ராவயல் கிராமத்திற்கு சென்ற ப.சிதம்பரத்தை பெண்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர். போன தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை. தற்போது மீண்டும் தேர்தலுக்காக கிராமத்திற்கு வந்துள்ளீர்கள். இங்கிருந்து செல்லவில்லை என்றால் கல்லால் அடிப்போம் என பெண்கள் ஆவேசமாக பேசினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ப.சிதம்பரம் அந்த கிராமத்தில் பிரச்சாரம் செய்யாமலேயே ஓட்டம் பிடித்தார். இதே நிலைதான் தமிழகம் முழுவதும் . திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடித்து வருகின்றனர்.