குன்னூரில் நடந்த பொது கூட்டத்தில் நீலகிரி தொகுதி வேட்பாளர் 2ஜி ஊழல் ராசா ஆன்மிகம் பற்றி பேசியது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் மாவட்ட திமுக சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் 2ஜி ஊழல் ராசா பேசியதாவது:
என் மனைவி சனிக்கிழமை ராமர் கோவிலில் கும்பிட்டதுடன், வியாழன் எனக்காகவும், திங்கள் சிவனுக்காகவும், 3 நாட்கள் விரதமர் இருந்தார். அவரது பூஜை அறை இன்றும் இருக்கிறது. ஒருநாளும் உள்ளே சென்றது கிடையாது. அவருக்கு நம்பிக்கை இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இங்குள்ள எல்லாருக்கும் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. இவ்வாறு ராசா பேசினார்.
இவரது பேச்சுக்கு பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சனாதனத்தை எய்ட்ஸ் உடன் இணைத்து பேசி இது ஒழிக்கப்பட வேண்டியது என்று கூறியவர் இந்த 2ஜி ஊழல் ராசா .ஆனால், தேர்தலுக்காக தற்போது எனது மனைவியும் ராமர் பக்தைதான் என்று போலியான தகவலை பரப்புகிறார். ராசா மனைவி இறந்தபோது அவரை கிறிஸ்தவ முறைப்படிதான் இறுதி அடக்கம் செய்ததை ஊரே பார்த்தது. ஆனால் ஓட்டுக்காக ஏன் இந்த நாடகம் போடுகிறார் என்ற கேள்வியை மக்களும் எழுப்பியுள்ளனர்.