ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் திமுக ஆட்சி: அண்ணாமலை!

தமிழகத்தில், ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, கடந்த 33 மாத திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என நேற்று மாலை (ஏப்ரல் 02) கோவை மக்களவைத் தொகுதியின் பிரச்சாரத்தின் போது தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெற்றிலைக் காளிப்பாளையம், என்ஜிஜிஓ காலனி, செங்காளிபாளையம், வெள்ளகினார், நஞ்சைகவுண்டன்பாளையம், உருமாண்டன்பாளையம், விஸ்வநாதபுரம், துடியலூர் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாவது:

கடந்த 2014 ஆம் ஆண்டு, நமது நாடு ஊழல் நாடு என்று அழைக்கப்பட்டது. பத்து ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் பாதி, திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது நாடு, ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல், அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறது. நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி, உண்மையான மக்களாட்சி. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி இல்லாமல், மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள், உலகின் முதன்மை நாடாக நமது நாடு உருவாக இடப்படும் அஸ்திவாரமாக அமையும். நாடு முழுவதும் எழுச்சி அலை வீசுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி.

ஆனால், தமிழகத்தில், ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, கடந்த 33 மாத திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் மாற்றம், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் இல்லை என்றால் எப்போதும் இல்லை.

பெண்கள், இளைஞர்கள், அரசியல் வேண்டாம் என்று இருந்தவர்கள் என அனைவரும், தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று எழுச்சியுடன் வீதிக்கு வந்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழகத்தில் ஒரு விரல் புரட்சி நடக்கவிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, மக்களை ஏமாற்றி வந்தவர்கள் அனைவரையும், நமது மக்கள் புறக்கணிக்கவிருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகள், ஊழலற்ற நல்லாட்சி வழங்கிய நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடிக்கு, அவரது கடின உழைப்பின் பலனாக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் ஒரு முறை 400க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் துணை இருக்க வேண்டும்.

கோவையின் வளர்ச்சிக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, நாடாளுமன்றத்தில் நமது குரலை எதிரொலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும். பாரதப் பிரதமர் கொண்டு வரும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும்.

கோவை வளர்ச்சி பெற, விவசாயம் செழிக்க, தொழில் துறை முன்னேற, கோவை அடுத்த கட்டத்திற்குச் செல்ல, நமது பாரதப் பிரதமர் அவர்கள் நேரடிப் பார்வையில், நமது கோவை வளர்ச்சி பெற, ஏப்ரல் 19 அன்று நாடாளுமன்றத் தேர்தலில், கட்சி வேறுபாடின்றி தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் உங்கள் வீட்டுப் பிள்ளை, அண்ணாமலையாகிய என்னை, வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top