நாமக்கல்லில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாகனப் பேரணி!

நாமக்கல்லில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத்துணைத் தலைவருமான ராமலிங்கத்தை ஆதரித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (ஏப்ரல் 08) வாகனப் பேரணி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் விமான நிலையத்திற்கு வந்தார்.

இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி.கல்லூரிக்கு ராஜ்நாத் சிங் சென்றடைந்தார். அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.பி. ராமலிங்கத்தை ஆதரித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாமக்கல்லில் வாகன பேரணி நடத்தினார்.

அவரை சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

ராஜ்நாத் சிங் வருகையால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தல் பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top