கோவை மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலைக்கு நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடனமாடி நேற்று (ஏப்ரல் 07) வாக்கு சேகரித்தார்.
கோவை மக்களவைத் தொகுதியில் தலைவர் அண்ணாமலையே போட்டியிடுவதால், இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இதனால் அத்தொகுதியில் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பா.ஜ.க., வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர், வடவள்ளி பகுதியில் உள்ள இந்திரா நகர், எம்.ஜி.ஆர் வீதி, கருப்பராயன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில், வீடு வீடாக சென்று நோட்டீஸ் வினியோகித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
சினிமா பிரபலம் என்பதால், கலா மாஸ்டரை கண்ட பெண்கள் அவருடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். அதன்பின் பி.என்.புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில், கலா மாஸ்டர் நடனமாடி பா.ஜ.க., தலைவர் அண்ணாமலைக்கு வாக்கு சேகரித்தார். இதனை கண்ட பெண்களும் அவருடன் இணைந்து நடனமாடினர்.