திருச்சிராப்பள்ளி மக்கள் சாலைப் பேரணிக்கு அளித்த அன்பான வரவேற்புக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருச்சியில் நேற்று (ஏப்ரல் 07) வாகனப் பேரணி நடத்தினார். இதில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டு அவரை வரவேற்றனர்.
திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வரை ஜே.பி.நட்டா கலந்து கொண்ட வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற வாகனப் பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக ஜே.பி.நட்டா கூறியிருப்பதாவது:
திருச்சிராப்பள்ளி மக்கள் சாலைப் பேரணிக்கு அளித்த அன்பான வரவேற்புக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான மக்கள் பங்கேற்றது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது, இது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ் வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் வலிமைக்கு சான்றாகும். உங்கள் உற்சாகம், எங்களை நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான செயல்பாட்டை அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.