யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு, தமிழக பாஜக சார்பாக, இனிய யுகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
யுகாதி பண்டிகை, பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழிக்கும், கலைக்கும், நம் மண்ணுக்கும் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் நம் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களின் புத்தாண்டாக, வசந்த காலத்தின் தொடக்க நாளாக, விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த இனிய யுகாதி தினத்தில், அனைவர் வாழ்விலும், புகழும் செல்வமும் பெருகவும், மகிழ்ச்சி நிறையவும் புத்தாண்டில், இறைவன் அருளினால் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.