நகைச்சுவை நடிகர்கள் அதிகம் இருந்தாலும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக முத்திரை பதித்தவர்கள் ஒரு சிலரே. ஆச்சி மனோரமா, கோவை சரளா, போன்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் நடிகை ஆர்த்தியும் ஒருவர். நடிகை ஆர்த்தி பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் கணேஷை திருமணம் செய்துகொண்டார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக இணைந்த நகைச்சுவை நடிகை ஆர்த்தி, அவரது மறைவிற்கு பின் அ.தி.மு.க.,வில் இருந்து விலகினார். தொடர்ந்து சினிமாவில் மட்டும் நடித்து வந்தார்.
இந்த நிலையில், நடிகை ஆர்த்தி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் இணைந்தார். ஆர்த்தியின் கணவர் கணேஷ் பா.ஜ.க.,வில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.