பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ குறித்து சிலர் பொய் செய்தியை பரப்பி வருகின்றனர் என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூட்டம் குறைவாக இருந்ததால் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிந்த பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’ என்ற பொய் செய்தியை வெளியிடுபவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமரின் பேரணி மக்களின் பேராதரவோடு நடந்தது. மக்கள் உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்றனர். பாஜகவிற்கான ஆதரவு தமிழகத்தில் அதிகரித்துள்ளதை சகித்துக் கொள்ளாதவர்கள் செய்யும் வேலை இது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.