மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை (ஏப்ரல் 12) காலை கிருஷ்ணகிரி மற்றும் சிதம்பரத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் நிதியமைச்சர், மாலை தஞ்சையில் வாகன பேரணியில் பங்கேற்கிறார். நாளை மறுநாள் (ஏப்ரல் 13) கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, 10,000 பெண்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகன பேரணி மேற்கொள்கிறார்.