குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டம் முடிவடைந்துவிட்டது. இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் மனுத்தாக்கல் செய்திருந்தார். அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டதோடு, சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் மனுக்களை திரும்ப பெற்றனர்.
இதனால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக சரித்திரம் படைத்துள்ளது.