‘கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது, பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது:
உலகிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதை முடிந்துவிட்டது. கேரளாவில் காங்கிரசும் கூட்டணி வைக்க மறுத்து விட்டது. கேரளாவில் பா.ஜ.க.,வுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. தாங்கள்வெற்றி பெற்றால், இந்தியாவின் அணு ஆயுதங்கள் அகற்றப்படும் என கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்களை அகற்ற முடியாது.
பா.ஜ.க.,வுக்கு வாக்களிக்க ஒட்டுமொத்த கேரளா மக்களும் தயாராக உள்ளனர். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர். இந்த தேர்தல் வன்முறை இல்லாத கேரளாவை உருவாக்குவதற்கான தேர்தல்.
நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்குவதற்கான தேர்தல். இ.ண்.டி. கூட்டணியின் இரு பங்காளிகள் கம்யூனிஸ்ட் மற்றும் மற்றும் காங்கிரஸ். டெல்லியில் ஒரு மேடையில் ஒன்றிணைகின்றன. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் ஒருவருக்கொருவர்சண்டையிடுகிறார்கள். அவர்களின்சண்டைபோலியானது. கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது, பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்.
பி.எப்.ஐ., பயங்கரவாத அமைப்பிற்கு தடை விதித்தது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் கம்யூனிஸ்ட் கட்சிகள் மவுனம் காக்கிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி தேசத்தை காக்க பாடுபடுகிறார். தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ.,க்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளிக்கிறது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.