மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்து களைச்சிப்போன முதல்வர் ஸ்டாலின் தற்போது ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குடிநீர் கிடைக்காமல் பல இடங்களில் மக்கள் அவதியுற்று வருகின்றனர். ஆனால் இதனை தீர்த்து வைக்க வேண்டிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளார். குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக செல்கிறார். ஏப்ரல் 29ம் தேதி புறப்படும் அவர் மே 7ம் தேதி வரை அங்கு தங்க திட்டமிட்டுள்ளார்.
சீனா ஆதரவு அதிபர் தற்போது மாலத்தீவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், இந்தியாவுக்கு மாலத்தீவுக்கும் உள்ள உறவுகள் சீர் கேட்டு இருப்பதும் நம் மக்கள் அறிந்ததே.
இந்த நிலையில், குலசேகரப்பட்டினம் திறப்பு விழாவில் சீன ராக்கெட் வைத்து விளம்பரம் கொடுத்தவர், அரசு பேருந்து பெயர் பலகையில் சீன எழுத்தை வரவைத்த பெருமைக்குரிய முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவு செல்வது, தேசத்துக்கு எதிராக சீனாவுடன் என்ன ஒப்பந்தம் போடப்படும் என்று கேள்வி எழுப்புகின்றனர் தேச பக்தர்கள்.
ஏற்கனவே இவரது அரபு நாடுகளின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பல சந்தேகத்துக்கு உள்ளாகி வந்திருக்கும் நிலையில் தற்போது மாலத்தீவு பயணம் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.