பல்வேறு ஊழலில் சிக்கி உள்ள ஆம்ஆத்மி உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
‘‘டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் சேர விருப்பம் இல்லை’’ என அரவிந்தர் சிங் லவ்லி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட ஊழல் கட்சிகள் இணைந்து இ.ண்.டி. கூட்டணியை உருவாக்கியுள்ளன. டெல்லியில் ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, முதல்வர் கெஜ்ரிவால் கூட, மதுபான ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். பல்வேறு ஊழலில் சிக்கி உள்ள ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சி மீது பொய் குற்றச்சாட்டுகளை ஆம்ஆத்மி சுமத்தியது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதில் துளியும் விருப்பம் இல்லை. இதனால் இனிமேலும் கட்சியின் தலைவராக தொடர்வதில் எந்த நியாயமான காரணமும் இல்லை. எனவே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.