தமிழுணர்வும், தமிழக மக்களின் முன்னேற்றம் குறித்த சிந்தனைகளும் கொண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டுஅவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;
தமிழுணர்வுக்கும், சமூகச் சீர்திருத்தங்களுக்கும் முன்னோடி, மகாகவி பாரதியார் என்று உரக்கக் கூறி, பாரதியாரின் மீதுள்ள பற்றால் தன் பெயரையே மாற்றி அமைத்துக் கொண்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்று.
தமிழுணர்வும், தமிழக மக்களின் முன்னேற்றம் குறித்த சிந்தனைகளும் கொண்டவர்.
தனது கருத்துக்களை, எவருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் எடுத்துரைத்தவர். கல்வி, இலக்கியம், நாடகம் என பல துறைகளில் முத்திரை பதித்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் புகழ், என்றும் நிலைத்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.