மத்திய பிரதேசத்தில் இந்தூர் மக்களவைத் தொகுதிக்கு மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் கன்டி இன்று (ஏப்ரல் 29) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்த வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் முதல்கட்டம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்றது. 3 மற்றும் 4 கட்ட தேர்தல் மே 7ம் தேதி மற்றும் மே 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்தூர் மக்களவைத் தொகுதிக்கு மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்சய் கன்டி வேட்பு மனுவை திரும்ப பெற்றார்.
வேட்பு மனுவை திரும்ப பெற்ற கையோடு பா.ஜ.க.,வில் இணைந்தார். இந்தோர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தற்போதைய எம்.பி., ஷங்கர் லால்வாணி போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்சய் கன்டி வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால், இந்தூர் தொகுதியில் பா.ஜ.க.வின் வெற்றி உறுதியாகி உள்ளது.
ஏற்கனவே சூரத் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தனது வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யப்படாததால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் பா.ஜ.க., வேட்பாளர் போட்டியின்றி எம்.பி.,யாக தேர்வானர் என்பது குறிப்பிடத்தக்கது.