கர்நாடக மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மே 07ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வடகர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காணும் பிசி காடிகவுடருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (மே 02) தீவிர பரப்புரை மேற்கொண்டார். அவர் திறந்த வாகனத்தில் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இளைஞர்கள் ஆர்வமுடன் தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.