கர்நாடக மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று (மே 03) பைந்தூர் பகுதியில் பாஜக சார்பில் மிகப்பெரிய வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். வழி நெடுகிலும் அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.
இந்த பேரணியில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் மங்களூர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் பிரிஜேஷ் சவுதாலா, உடுப்பி, சிக்கமங்களூரு வேட்பாளர் கோட்டா ஸ்ரீனிவாசா பூஜாரி, நிர்வாகிகள் தாரா, தீபக் ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.