சென்னையில் வெயில் அதிகரித்து வரும் நிலையில், பறவைகளின் தாகத்தை தீர்க்கின்ற வகையில் நமோ நீர்க்குவளைகளை பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வினோத் அமைத்துள்ளார்.
தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்னரே வெப்ப அலை வீசி வருகின்றது. இதனால் காலை 9 மணி முதலே மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை உள்ளது. இந்த வெப்ப அலையில் விலங்குகள் மற்றும் பறவைகள் அதிகளவு பாதிப்பை சந்தித்து வருகிறது.
குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள பறவைகள் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் எதாவது கிணறு அல்லது குட்டைகளில் இருக்கின்ற நீரை பருகி பறவைகள் தாகத்தை தீர்த்துக்கொள்ளும். ஆனால் நகர்புறங்களில் உள்ளவர்கள் பறவைகளின் தாகத்தை பற்றி கவலைப்படுவதில்லை.
இந்த நிலையில்தான், சென்னை அண்ணாநகரில் பறவைகள் ஆர்வலரும், பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினருமான வினோத் பறவைகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் நமோ நீர்க்குவளை திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
அண்ணாநகரில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் நீர்க்குவளைகளை அமைத்துள்ளார். இதன் மூலம் பறவைகளுக்கு தினமும் தண்ணீர் கிடைக்கிறது. இந்த நீர்க்குவளையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் தண்ணீர் அருந்தி தங்களின் தாகத்தை தீர்த்துக்கொள்கிறது. நீர்க்குவளை அமைத்த வினோத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இது குறித்து நம்மிடம் தெரிவித்ததாவது:
நமோ என்று பிரதமர் நரேந்திர மோடியை ஏன் அழைக்கிறோம் என்றால், நமது நாட்டில் உள்ள 25 கோடி ஏழைகளின் தரத்தை உயர்த்தியுள்ளார். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் நிறைய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார். பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் சரணாலங்களில் சென்று பார்வையிட்டுள்ளார். நமது நாட்டில் உள்ள சரணாலயங்களுக்கும் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் தேவையை பூர்த்தி செய்கின்ற திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மனிதக்குலங்களை தாண்டி மிகப்பெரிய பூலோகத்திற்கே மாற்றத்தின் தந்தையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். அதை முன்னிட்டுதான் நமோ நீர்க்குவளை திட்டத்தை ஆரம்பித்தோம். இந்த கோடைக்காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் இருப்பதில்லை. எனவே பறவைகளின் தாகத்தை தீர்க்கின்ற வகையில் தமிழகம் முழுவதும் உள்ள நமது நிர்வாகிகள் இத்திட்டத்தை எடுத்துச்செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு வினோத் கூறினார்.