தனது தோளில் மீது கை வைத்ததற்காக காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மீது பளார் என்று அறைந்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
ஹவாரியில் உள்ள சவானூர் டவுண் பகுதியில் மாநில துணை முதல்வர் சிவக்குமார் நேற்று (மே 05) பிரசாரத்திற்கு வந்தார். இவரை பலரும் டிகே, டிகே, என குரல் எழுப்பி வரவேற்றனர். அப்போது முனிசிபல் கவுன்சிலர் அலாவுதீன் மணியார், டி.கே.சிவக்குமார் தோளில் கையை வைத்து அழுத்தினார்.
இதில் ஆத்திரமுற்ற அவர் அலாவுதீன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த வீடியோவை பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தொண்டருக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா என கேள்வி எழுப்பியுள்ளது.