பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.
இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் 1-ம் தேதி உத்திர பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய நாள் 13-ம் தேதி அவர் வாரணாசியில் வாகனப் பேரணி நடத்துகிறார். பேரணி செல்லும் பாதை இறுதி செய்யப்பட்டு விட்டது என்றும் பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் வாரணாசி நகர பாஜக தலைவர் வித்யாசாகர் ராய் தெரிவித்தார்.
பிரதமர் மோடி வேட்புமனுதாக்கலின்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் வாரணாசியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் மூன்றாவது முறையாக லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என வாரணாசி மக்கள் கருத்து கூறி வருகின்றனர்.