திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதால் பாலாற்றுக்கு செல்லும் வழியை அப்பகுதி மக்கள் இரும்பு கேட் வைத்து அடைத்தனர்.
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம், ஈச்சங்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓடும் பாலாற்றில் பல நாட்களாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பாலாறுக்கு செல்லும் வழியில் கேட் அமைத்து பூட்டனர். பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்காத திராவிட மாடல் அரசுக்கு இனி மக்களே பாடம் புகட்டுவர் என்பது தெளிவாகிறது.