திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டு தொடங்கியுள்ளது. இந்த ஆட்சியின் லட்சணம் குறித்து பிரபல யூட்யூப் டிஜிட்டல் சேனல் சாணக்யா கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் 82.34 சதவிகித பேர் படு மோசம் என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது திமுக. அப்போது முதல் தற்போது வரை கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் நடமாட்டம் என மாநிலமே சட்டம் ஒழுங்கு பராமரித்தலில் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது.
இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி நடைபெறுகிறது. தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திமுக ஆட்சியின் மூன்று ஆண்டு எப்படி? என பிரபல டிஜிட்டல் சேனல் சாணக்யா கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன்படி சாணக்யா எழுப்பிய கேள்விக்கு மொத்தம் 20,370 பேர் வாக்களித்துள்ளனர். அவர்களுள் மூன்றாண்டு திமுக ஆட்சி சூப்பர் என 10.14 சதவிகித பேரும், பரவாயில்லை என 7.52 சதவிகித பேரும், திமுக ஆட்சி மோசம் என 82.34 பேரும் வாக்களித்துள்ளனர்.