ஆந்திர மாநிலம், திருப்பதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அங்கு பிரம்மாண்ட வாகன பேரணி மேற்கொண்டார்.
ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலையில் இன்று காலை (மே 11) தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சுவாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனப்பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது லட்சக்கணக்கான பாஜக தொண்டர்கள் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர். கூட்டணி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றனர்.
ஆந்திராவில் வரும் மே13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டது பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.