திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

ஆந்திர மாநிலம், திருப்பதி, திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (மே 11) தரிசனம் செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மூன்று கட்டத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் நான்கு கட்டத்தேர்தல் உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே இன்று திருப்பதியில் உள்ள திருமலையில் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருமலை தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;

திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரார்த்தனையுடன் எனது நாள் தொடங்கியது, வெங்கடேஸ்வர சுவாமியின் ஆசீர்வாதம், இந்த புனித ஸ்தலத்தின் அமைதியும், வெங்கடேஸ்வரரின் தெய்வீக சக்தியும் நம் இதயங்களை அமைதியால் நிரப்புகின்றன.

நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன். வெங்கடேசப் பெருமான் நம் மீது அருள் பொழிந்து செழிப்பு, ஒற்றுமை மற்றும் அமைதியை நோக்கி நம்மை வழிநடத்தட்டும். இவ்வாறு தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top