வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 13) வாகனப் பேரணி நடத்திய பின் காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் இம்முறையும் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இங்கு 7வது கட்டமாக வரும் ஜூன் 1ல் வாக்குப்பதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய (14.05.2024) கடைசி நாள். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி (மே 14) தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக இன்றும், நாளையும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதன் ஒருபகுதியாக, வாரணாசியில் நேற்று (மே 13) பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணி நடத்தினார். வாரணாசியின் முக்கிய சாலைகள் வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பேரணி நடைபெற்றது.இதில் உத்திர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு வழிநெடுக லட்சக்கணக்கான தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று அங்கு பூஜை செய்து வழிபட்டார். மோடியுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடனிருந்தார்.