மக்களவைத் தேர்தலில் நடந்து முடிந்த 4 கட்ட வாக்குப்பதிவிலேயே பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று (மே 15) தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அவர், இந்தத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் என்பதில் மக்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லையெனத் தெரிவித்தார். கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலைப் போன்றே, இம்முறையும் மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
கடந்த காலங்களில் மும்பை நகரம் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இது முற்றிலும் முந்தைய அரசுகளின் தோல்வி எனவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டது. இந்த தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களிலும் நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.