பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் அவருக்கு எதிராக தாக்கல் ஆன 55 மனுக்களில் 36 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய இணையதளத்தின் படி பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் உள்பட 15 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆறு பேர் மட்டுமே களத்தில் உள்ளனர்.
வரும் ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவின் போது வாரணாசியில் தேர்தல் நடக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்தத்தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த, தொலைக்காட்சி ஷோக்களில் மிமிக்கிரி செய்து பிரபலமான ஷியாம்ரங்கீலா வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
வாரணாசி தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி செயல்படுத்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சியில் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட வாரணாசி தற்போது இந்தியாவிலேயே முதன்மையான தொகுதியாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் பல்வேறு சதிகளை செய்தாலும், பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றிப்பெறுவது உறுதி.