அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஜூலை 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரியும், வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இதனை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மே 15ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று விசாரணை நடைபெற இருந்த நிலையில், இன்று (மே 16) ஒத்திவைக்கப்பட்டது. இதனால் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை வரும் ஜூலை 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமின் கிடைக்கும் என திமுகவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்ததால் அக்கட்சியினர் கலக்கம் அடைந்து உள்ளனர். பணமோசடி செய்தவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் கருத்தாக உள்ளது.