தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை வலுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேற்றுடன் நிறைவடைந்த 2024ம் ஆண்டுக்கான 5ம் கட்ட தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை வலுத்து வருகிறது.
மத்தியில் வலுவான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று இந்திய மக்கள் முடிவு செய்துள்ளனர். இண்டி கூட்டணியினர் எந்த வகையான வாக்கு வங்கி அரசியலையும் செய்யலாம். மக்கள் நம்ப மாட்டார்கள். அவர்கள் முற்றிலும் மதிப்பிழந்து, மனச்சோர்வடைந்துள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.