தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். அதே நேரத்தில் திமுகவும், காங்கிரசும் தமிழினத்துக்கு செய்த துரோகம் பற்றிய புத்தகம் பரிசாக அளிக்கப்படும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒரிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் அரசின் நிர்வாக சீர்கேட்டை பற்றி நரேந்திர மோடி விமர்சனம் செய்தார். அதனை முதல்வர் ஸ்டாலின், தமிழக அதிகாரியாக பணிபுரிந்தவரை அவமானப்படுத்திவிட்டார் என்று திரித்துக்கூறியிருந்தார். இதற்கு தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சி உப்புக்கு சப்பாக, ஆமா! ஆமா! தமிழரை பிரதமர் அவமானப்படுத்திவிட்டார். இதற்கு தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும் எனக்கூறியிருந்தது.
இந்த நிலையில், தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.
மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.
எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.