இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசில் அனைத்து தொழில்களும் மிக வேகமாக வளர்ச்சியை நோக்கி கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் ஐஎஸ்ஐஎஸ் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், எம்என்சி நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் 350-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்;
உலகளவில் எந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்தாலும், பயங்கரவாத சம்பவங்கள் நடந்தாலும் உடனே ஐஎஸ்ஐஎஸ் ஆக இருக்குமோ? என்ற கேள்விதான் பொதுமக்களுக்கும் சரி, புலனாய்வு அமைப்பினருக்கும் வரும். அந்த அளவுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு உலகத்தில் ஒரு புற்றுநோய் போல் பரவி வருகிறது.
கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, வடமேற்கு ஈரான் மற்றும் கிழக்கு சிரியாவில் பெரும்பாலான நிலங்களைக் கைப்பற்றி இருந்த நிலையில் தனக்கென 3000 போராளிகள், ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிதிஅறிக்கை, அல் கொய்தா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பு என்றெல்லாம் தயாரித்து தனி ராஜாங்கம் நடத்தி வந்தது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் துருக்கி படைகளின் தாக்குதலால் 2018ஆம் ஆண்டு தனது ஆக்கிரமிப்பு நிலங்களை எல்லாம் இழந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் வட ஆப்பிரிக்காவில் உள்ள சாகர் பகுதியில் தஞ்சமடைந்தனர்.
மேற்கு ஆசியாவில் முழுவதுமாக தனது இருப்பை இழந்தாலும் ஐஎஸ்ஐஎஸ், தனக்கான ஒரு ஆதரவாளர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் தொடங்கி மருத்துவர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள் வரை, மூளைச் சலவை செய்து தனது பக்கம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு.
உலகத்தையே அச்சுறுத்தும் ஒரு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் போன்றவர்களின் வலையில் இப்போது சிக்கியிருப்பது, எம்என்சி எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருக்கும் இளம் பெண்கள்.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு கேரளாவில் இருந்து இளம் பெண்களைக் அழைத்து வந்து மூளைச் சலவை செய்து ஊழியர் போர்வையில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும் என்பதற்காக, தங்களுடைய குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே தங்க வைத்திருக்கிறார்கள் இந்த பயங்கரவாத அமைப்பினர்.
2014 ஆம் ஆண்டு தனது தலைமை அலுவலகத்தை கேரளாவிலிருந்து டெல்லியில் ஷாஹீன் பாக் நகருக்கு மாற்றி இருக்கும் தடை செய்யப்பட்ட இந்த பயங்கரவாத அமைப்பினரை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைப்பினர் கண்காணிக்கத் தொடங்கியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தீவிரவாத குழுக்களால் குறிவைக்கப்படும் பெண்கள் பெரும்பாலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பணிபுரிகின்றனர்.
மேற்கு ஆசியாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களையம் ஐஎஸ்ஐஎஸ் குறிவைத்துள்ளதாக கூறும், தேசிய பாதுகாப்பு அதிகாரிகள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இந்தப் பெண்களைத் தங்களின் தீவிரவாத செயலுக்கு எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக இப்போது தயார் படுத்தி வருகிறார்கள் என்று தெரிவிக்கின்றனர்.
இந்த மாதிரி இளம் பெண்களைச் சர்வதேச நிறுவனங்களில் தீவிரவாதிகள் பணியில் அமர்த்துவது எதற்காக என்ற கேள்வி வருகிறது அல்லவா?
குறிப்பிட்ட நிறுவனத்தின் வணிக பாதுகாப்பு நெட்வொர்க்கை சிதைப்பதால், அந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தை அடையும். அதனால், இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். ஒட்டு மொத்தத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நம்பகத் தன்மையை உடைத்து, இந்திய ஐடி நிறுவனங்களையும் ஒழிப்பது தான் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் நோக்கம் என்பது தெரியவந்துள்ளது.
படித்த இளைஞர்கள் பலர் ஐஎஸ்ஐஎஸ் வலையில் சிக்கியுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்து, தண்டனைப் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ள என்ஐஏ அதிகாரிகளை பாராட்டாமல் இருக்க முடியாது.