பீகார் மாநிலம், சரண் மக்களவைத் தொகுதியில் கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பா.ஜ.க. சார்பில் எம்.பி. ராஜீவ் பிரதாப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இண்டி கூட்டணி வேட்பாளராக ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா போட்டியிட்டார்.
வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் காலை சரண் தொகுதிக்கு உட்பட்ட படா டெல்மா பகுதியில் வன்முறை வெடித்தது. வாக்குப்பதிவின்போது முறைகேடுகள் நடந்ததாக பா.ஜ.க. மற்றும் ஆர்.ஜே.டி. தொண்டர்களுக்கு இடையே மோதல் மூண்டது. இந்த மோதலின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். இதற்கிடையில், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் குமார், இச்சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் கீழ் ரோகிணி ஆச்சார்யா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.