272 தொகுதியில் வெற்றி பெற்றாலே ஆட்சி அமைக்கலாம் என்பது கூட இண்டி கூட்டணி கட்சியினருக்கு தெரியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.
அதன் பின்னர் இண்டி கூட்டணி குறித்து ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் மோடி கூறும்போது, இந்த முறை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்ற கோஷத்துடன் பாஜக தேர்தலை சந்தித்தது.
இண்டி கூட்டணி தலைவர்கள் பல நாட்கள் வரை பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்று கூறிதான் பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஆனால் 272 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை என்று சிரித்தவாறே பிரதமர் மோடி கூறினார். இதற்கு அங்கு இருந்து அனைவரும் பலத்த கைத்தட்டல்களை வெளிப்படுத்தினர்.