மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை நேற்றுடன் (மே 30) முடிவடைந்தது. நாளை ஜூன் 1ம் தேதி 7வது கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிந்துள்ள நிலையில், பிரச்சாரத்தை முடித்த கையோடு நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்களுக்கு அடுத்தடுத்து சென்று வழிபாடு செய்ய இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
நேற்று (மே 30) காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலிலும், தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலிலும் வழிபட்டார். இன்று (மே 31) திருப்பதியில் ஏழுமலையானை வழிபட்டார்.
இதனைத்தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலிலும் வழிபட உள்ளார்.