புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சத்தியகிரீசுவரர் சிவாலயம், சத்தியமூர்த்திப் பெருமாள் கோவில், கோட்டை கால பைரவர் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மே 30) சுவாமி தரிசனம் செய்தார்.
இதன் பின்னர் தரிசனம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலில் வழிபாடு செய்தேன். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் இறைவனை வேண்டிக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.