பிரதமர் நரேந்திர மோடி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவு செய்த பிஸ்மி என்பவர் மீது பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் துணைத்தலைவர் கார்த்திக் கோபிநாத் தலைமையில், சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் கடந்த வியாழன் மாலை முதல் தியானம் மேற்கொண்டு வருகிறார். அவர் வருகை குறித்து திமுக மற்றும் அதிமுக, திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி வலைபேச்சு பிஸ்மி என்ற பெயரில் உள்ள நபர், பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பும் வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் பன்னிக்குட்டி முகத்தில் காவி உடை அணிந்த ஒரு கார்டூனை பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு ஒட்டுமொத்த ஹிந்துக்களையும் அவமதித்துள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாஜக ஐடிவிங் சார்பாக கடுமையான கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து அவதூறாக பதிவிட்ட பிஸ்மி என்ற நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக ஐடிவிங் துணைத்தலைவர் கார்த்திக் கோபிநாத், புகார் அளித்துள்ளார்.
அதே போன்று கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி இறைஞ்சிலி கடுங்கண்ணி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடியை ஆபாசமாக சித்தரித்து மீம்ஸ் புகைப்படங்கள் பதிவு செய்துள்ளார். இதேபோல் சிதறால் பகுதியை சேர்ந்த ஒருவரும் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் பதிவிட்டுள்ளார். இவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு குமரி மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் விரிகோடு பகுதியை சேர்ந்த சுஜின்ராஜ், மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.