தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.இலட்சுமணன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சேலத்தில் பாஜக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சேலம், செவ்வாய்பேட்டை தேர்நிலையத்தில் இன்று (ஜூன் 1) காலை கே.என்.இலட்சுமணன் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. படத்திற்கு மலர் தூவி பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.பி.கோபிநாத், சுரேஷ்பாபு மாநகர் மாவட்ட தலைவர், சசிகுமார் மாவட்ட பொதுச்செயலாளர், ஆன்மிகம் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அபிராமி முருகேசன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் பாலவிநாயகம், செவ்வை மண்டல் தலைவர் டெல்லி விஜய், மற்றும் பழனிசாமி கொண்டலாம்பட்டி மண்டல் தலைவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.