நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று மாலை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவானது நிறைவு பெறுகிறது. இன்றைய தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதன்படி பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களும், சண்டிகார் யூனியன் பிரதேசமும் ஆகும். இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்,தன்னம்பிக்கை மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். என வேண்டுகோள் விடுத்துள்ளார்.