மேட்டுப்பாளையம் நகராட்சியின் 23வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கவிதாவின் கணவர் தாக்கியதில் கழுத்து எழும்பு உடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு சரியான மருத்துவம் செய்யவில்லை என தமிழக பாஜக தொழில்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
மேட்டுபாளையம் நகராட்சி 23வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கவிதாவின் கணவர் தாக்கியதில் கழுத்து எழும்பு உடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கௌதம்.
கவுன்சிலர் கொடுத்த அழுத்தத்தால் மருத்துவர்கள் யாரும் இதுவரை அவரை வந்து பரிசோதிக்க வில்லை, இரண்டு நாட்களாக அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.
கழுத்து மற்றும் தொண்டை பகுதியில் கடுமையான வலி இருப்பதால் உணவு உட்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்.
இந்த நிலையில்தான் கடமையே கண்ணான காவல்துறை அவர்மீதும் அவரது தாய் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆளுங்கட்சிக்கு எதிராக புகார் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு கௌதமின் இந்த நிலையே சாட்சி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.