உலகளவில் அதிக உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திருவள்ளூரில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் தெரிவித்தார்.
திருவள்ளூவர் மாவட்டம், செம்பரம்பாக்கத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
நமது நாட்டிலேயே பெரிய அளவில் வளர்ந்திருக்க கட்சி, நமது நாட்டில் மட்டுமின்றி உலகளவில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவில் மிகப்பெரிய அளவிலான உறுப்பினர்களை கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது.
எப்படி நமது கட்சியில் இவ்வளவு உறுப்பினர்கள் சேர்ந்தார்கள். நான் இன்னொரு விஷயத்துக்கு வருகிறேன். ஆம்.. இவ்வளவு பெரிய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்றீங்க ஆனால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி., கூட ஜெயிக்கலயே என்று கேட்கிறவர்களுக்கு பதில் கொடுக்கிறேன். உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள் ஏன் சேர்ந்தாங்க.. கிட்டத்தட்ட பத்து வருஷமா பிரதமர் மோடி அவர்கள் முக்கியமாக பெண்களுக்கு எந்தெந்த வடிவில் கஷ்டம் இருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு எந்தெந்த நிலையில் உதவுனோம் என்பதை பார்த்து, பார்த்து திட்டங்களை செய்து வருகிறார்.
பெண்கள் விரகு அடுப்பு எறியூட்டுவதை அறிந்து எவ்வளவு பெரிய விலையாக இருந்தாலும் பெண்களுக்கு மானியத்தில் கேஸ் அடுப்பு கொடுங்க என்ற உத்தரவை பிறப்பித்தவர் பிரதமர். மிக நீண்ட தூரமாக குடங்களில் தண்ணீர் எடுத்து வந்த நிலையில், ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான தண்ணீரை கொடுக்க திட்டமிட்டு செயல்படுத்தியவர் பிரதமர். அதே போன்று சாலை வசதியே இல்லாத கிராமத்திற்கு புதிய தார் சாலை, வீடுகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட ஒவ்வொரு அம்சமாக பார்த்து, பார்த்து கொடுத்து வருகிறார்.
அதோடு பெண்கள் ஒவ்வொருவருக்கும் வங்கியில் புதிய கணக்கு இருக்க வேண்டும் என்பதற்காக தொடங்கி வைத்தார். அரசு செலுத்தும் பணம் பெண்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கிற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே புதிய வங்கி கணக்கு தொடங்க உத்தரவிட்டார். மேலும் பெண்களுக்கு கல்விக்காக உதவி என பல நல்லத்திட்டங்களை கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் எடுத்து வந்துள்ளார்.
கொரோனா நேரத்தில் உலகமே ஸ்தம்பித்து நின்றது. மருந்துக்கூட கிடைக்காத சமயத்தில் பிரதமர் நமது பெண்கள் கஷ்டப்படக்கூடாது என்தற்காக வங்கியில் பணம் செலுத்தினார். அதோடு இலவசமாக ரேஷனில் ஒவ்வொருவருக்கு பத்து கிலோ அரிசி வழங்கினார். இன்றைய தேதி வரைக்கும் அத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இவை பிரதமர் மோடி அரசு செயல்படுத்தி வரும் திட்டமாகும். ஏழைகள் உணவின்றி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பத்து கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டம் 2029ம் ஆண்டு வரைக்கும் பிரதமர் நீட்டித்துள்ளார்.
இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் போய் பிரதமர் உதவி செய்து வருவதால், இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியில் பெண்கள் அதிகளவில் இணைந்து வருகிறார்கள்.
தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை வழங்கிய பிரதமர், எங்கள் கட்சியில்தான் இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு வேற கட்சியில் போய் சேர்ந்திடுவியா? பார்த்திரேன் உன்ன நம்ம ஊர் காரங்கள வச்சே சொல்ல வைக்கின்றனர். தயவு செய்து நீங்கள் சொல்லிடாதீங்க, இங்க கேமரா எல்லாம் இருக்கிறது. நாளைக்கு உங்க வீட்டுக்கு (திமுகவினர்) வந்துடுவாங்க. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர்.