ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க அற்புதமான திட்டம் ஆகும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமா? அதாவது பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இது சாத்தியமா என்றால், இவ்வாறு தான் நம்முடைய இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா குடியரசு நாடாக பின்னர் முதல் நான்கு தேர்தல்கள் 1967வரை அப்படித்தான் நடந்தன.
காங்கிரஸ் கட்சியின் தவறுகளால், குளறுபடி மற்றும் குழப்பங்களினால் நம்முடைய தேர்தல்கள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபட்டது. ஏன் அப்படி இருந்தது என்றால் இந்தியா தன்னுடைய நிர்வாக வசதிக்காக, மொழி வாரியாக மாநிலங்களை பிரித்து நிர்வாகம் செய்ய துவங்கியது.
ஒரு தேர்தல் நடக்கிறது என்று சொன்னால் அது பாராளுமன்றத்திற்கும் சரி, மாநில சட்டசபைகளுக்கும் சரி,ஒரே மாதிரியாக ஒரே நேரத்தில் அவை செயல்பட வேண்டும் என்பதுதான் நோக்கம்.இந்த நோக்கத்தில் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் உருவாக்கப்பட்டது.
ஆனாலும், நமது தவறுகளினால் அந்த அற்புதமான வாய்ப்பை இழந்துவிட்டோம். இப்போது அதை சரி செய்யக்கூடிய ஒரு நேரம் வந்திருக்கிறது. நீண்ட நாட்களாக நாம் சொல்லி வருகிறோம் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று.அந்த கனவு தற்போது நனவாகி வருகிறது.
இது எப்படி சாத்தியம்? என்று கேட்டால், கண்டிப்பாக சாத்தியம்தான். ஒரு வேளை தமிழகத்தை உதாரணமாக வைத்துக்கொள்வோம். 2026ல் தமிழகத்தில் தேர்தல் வருமே. அடுத்து பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2029 ல்இருக்கிறதே? இது எப்படி சாத்தியம் என்று கேட்பார்கள். பல வல்லுநர்களை கொண்டு, சட்ட நிபுணர்களை கொண்டு பாராளுமன்ற குழுக்களின் மூலமாக கண்டறிந்து இப்போது ஒருமுடிவுக்கு வந்திருக்கிறார்கள் .உதாரணத்திற்கு 2026ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. ஆனால் 2029ல் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும்.
அப்போது என்ன செய்ய வேண்டும். 2026ல் நடத்தப்படும் சட்டமன்றத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மூன்று வருடத்திற்கு மட்டுமே அதாவது 2029 வரை மட்டுமே இயங்கும். மீண்டும் 2029ல் பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கும் . 2034ல் மீண்டும் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும். இதுதான் மிகப்பெரிய விஷயம் ஆகும்.
ஒரு வேளை இதில் ஒரு ஆட்சி கவிழ்ந்துவிட்டது என்று சொன்னால் அந்த ஆட்சி கவிழ்ந்தாலும், அந்த ஆட்சி நீக்கப்பட்டாலும் அல்லது ராஜினாமா செய்தாலும், மீண்டும் சட்டமன்றத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு,அடுத்து நடைபெறும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரையில்தான் இருக்கும். இதுதான் சிஸ்டம். இப்படி ஒரு அமைப்பை நாம் கொண்டு வருகிறோம்.
சரி எதற்காக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றால்? நம்முடைய நாட்டில் மூன்று மாதங்களுக்கு ஒரு தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பணம், நேரம் விரயம் ஆகிறது. அதோடு அதிகாரிகளின் உழைப்பு அரசியல்வாதிகளின் படையெடுப்பு மற்றும் அவர்கள் செய்யும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு, இவை எல்லாம் நாம் தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் ஒரே நாடு, ஒரே தேர்தல் மிகவும் அவசியமாகிறது.
இப்படி நம்முடைய நாட்டில் பணம், நேரம் விரயம், உழைப்பு விரையம் உள்ளிட்டவை தவிர முக்கியமாக மத்திய அரசின் கட்டமைப்பு மற்றும் திட்டங்கள் பாதிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னும் தேர்தலுக்கு பின்னுமாக,தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேர்தல் விதி நடைமுறைகளினால் மூன்று மாதங்கள் நமது வளர்ச்சிப் பணிகள் மாநிலங்களோடு இணைந்து பாதிக்கப்படுகின்றன. இதனால்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் செய்யப்போகிறோம்.
ஒரு வேளை எதிர்பாராமல் மத்திய அரசே கவிழ்ந்துவிட்டது அல்லது மத்திய அரசுக்கு ஆபத்து என்ற சூழ்நிலை வந்தால்கூட, குறுகிய காலமாக இருந்தால் அடுத்த பொதுத்தேர்தல் வரையிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும். அதிகமான காலமாக இருந்தால் மீண்டும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அரசுஅடுத்த பொதுத் தேர்தல் வரும் வரையில் ஆட்சியில் இருக்கும். . இவை எல்லாம் ஒரு சட்டத்திருத்தமாக கொண்டுவந்து இரு அவைகளிலும் நிறைவேற்றி சட்டசபைகளில் 50 விழுக்காடு சட்டசபைகள் இதை நிறைவேற்ற வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிதலைவர்களும் ஒத்துழைப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். எதிரணியில் உள்ள இண்டி கூட்டணியில் உள்ளவர்கள் கூட ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உறுதியாக 2029ல் இந்திய பாராளுமன்றத்திற்கும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலசட்டசபைகளுக்கும் தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறும். இது உறுதி!
நாராயணன் திருப்பதி
மாநிலத்துணைத்தலைவர்