மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் 80 சதவீத நரிக்குறவர் சமுதாய மக்கள், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு வாரங்களில் மட்டும் 4 கோடிக்கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளனர். அதே போன்று தமிழகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நரிக்குறவர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நேரடியாக சென்று அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார். அப்பகுதியில் வசித்த நரிக்குறவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் பாஜகவில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். நரிக்குறவ சமூதாய மக்கள் மத்தியில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வரவேற்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.